முந்திரி பக்கோடாவும்... முரளிதர ராவும்!- சங்கதி தெரியாத கோவை சக்தி கேந்திர கூட்டம்


வடநாட்டு தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் ‘கரே புரே’ என இந்தியில் எதையாவது பேசுவார்கள். “டியர் பார்ட்டி லீடர்ஸ்... டெலிகேட்ஸ்” என்று ஆங்கிலத்திலும் நாலு ஆத்து ஆத்திவிட்டு சாண்ட்விச்சும் முந்திரி பக்கோடாவும் சாப்பிடப் போய்விடுவார்கள்!

ஆனால் இதிலிருந்து சற்றே வித்தியாசமாகத் தெரிந்தார், கடந்த வாரம் கோவை நாடாளுமன்றத் தொகுதி பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்த தமிழகப் பொறுப்பாளர் முரளிதர ராவ்.

6 சட்டமன்றத் தொகுதி கொண்ட ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு சுமார் 1800 சக்தி கேந்திரப் பொறுப்பாளர்கள் வந்திருக்க வேண்டும். இவர்களோடு பிற பொறுப்பாளர்களையும் சேர்த்தால் 2500 பேராவது இருந்திருக்க வேண்டும். ஆனால், அங்கு கூடியிருந்ததே 500 பேருக்குள்தான் என்றால் கோபம் வராமல் என்ன செய்யும்?

மேடையில் முரளிதர ராவுக்கு மகாராஜா நாற்காலியும் உள்ளூர் பூசாரிகளுக்கு சாதாரண ஆசனமும் போட்டிருந்தார்கள். இதைப் பார்த்ததுமே டென்ஷன் ஆன ராவ், “எனக்கு மட்டும் எதற்கு இந்த நாற்காலி?”என்று கேட்டு அதைக் கடாசிவிட்டு சாதா ஆசனத்தில் அமர்ந்தார்.

x