மோடி மீண்டும் வராவிட்டால், அச்சுறுத்தல் மீண்டும் தலையெடுக்கும்!


நாராயணன் திருப்பதி
 

பாஜக ஆட்சியைப் பற்றிச் சொல்வதற்கு முன்பு, மக்கள் ஏன் காங்கிரஸ் ஆட்சியைத் தூக்கியெறிந்தார்கள் என்பதை நினைவுபடுத்த வேண்டியது என் கடமை. அவர்களது ஆட்சியில் நமது நாட்டின் கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி, அமைதி பாதிக்கப்பட்டது. பண வீக்கம் உச்சிக்குச் சென்றது; தனி மனித செலவீனங்கள் அதிகரித்தன; சேமிப்பு குறைந்தது. இதற்கெல்லாம் காரணம் முந்தைய ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் கொள்கை முடக்குவாதம்.

வங்கிக்கடன், வாராக்கடன்:

2008-ம் ஆண்டு துவக்கத்தில் 18 லட்சம் கோடியாக இருந்த வங்கிக் கடன்கள் 2014 மார்ச்சில் 52 லட்சம் கோடியாக உயர்ந்தன. கண்மூடித்தனமாகக் கொடுக்கப்பட்ட கடன்கள், சிபாரிசு மற்றும் முறையான பிணைகளில்லாமல் கொடுக்கப்பட்ட கடன்கள் இந்தியாவின் வங்கித் துறையை மோசமான பாதைக்கு இட்டுச்சென்றன. ஒருசில நிறுவனங்களுக்கு வெவ்வேறு கணக்குகளில், கடனுக்கு மேல் கடன்களை வழங்கி அதிக வர்த்தகம் இருப்பது போன்ற மாயை உருவாக்கப்பட்டது. ஒரு கடனைப் பெற்று முந்தைய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிக்கொண்டிருந்த மோசடியை பாஜக அரசு தடுத்து நிறுத்தியது.

x