ஈஸ்வரனால் திமுகவுக்கு என்ன பலன்? கொங்கு மண்டலத்தில் கும்மியடிக்கும் விவாதம்!


கா.சு.வேலாயுதன்

கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கைக் கூட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தினகரனிடமிருந்து இழுத்த திமுக, இப்போது ஈஸ்வரன் தலைமையிலான கொமதேகவுக்கு ஒரு தொகுதியுடன் தனது சின்னத்தையும் தாரை வார்த்திருக்கிறது. அநேகமாக ஈஸ்வரன், நாமக்கல் தொகுதியில் களம் காணுவார் என்று சொல்லப்படும் நிலையில், “ஈஸ்வரன் வருகையால் திமுகவுக்கு எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை” என்ற செய்திகளே கொங்குச் சீமையில் பெரிதாக எதிரொலிக்கின்றன!

கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாளக் கவுண்டர்களும் அவர்களுக்கு அடுத்தபடியாக அருந்ததியர் சமூகத்தினரும் கணிசமாக இருக்கிறார்கள். இதனால், திமுகவும் அதிமுகவும் இங்கே காலங்காலமாக கவுண்டர் இனத்து வேட்பாளர்களையே நிறுத்தி வருகின்றன. என்றபோதும் அருந்ததியர்கள் சமூகத்து மக்களில் பெரும்பகுதியினர் எம்ஜிஆர் விசுவாசிகளாக இருப்பதால் அவர்களின் ஆதரவில் கொங்கு எப்போதும் அதிமுக கோட்டையாகவே இருந்து வருகிறது.

என்றாலும் தங்களது நீண்டகால பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை. அதை எட்டவேண்டுமானால் நமக்கென்று ஒரு கட்சி வேண்டும்; நம்மவர் ஒருவர் முக்கிய இடத்துக்கு வர வேண்டும் என்று சொல்லித்தான் 2009-ல், ஈஸ்வரன், பெஸ்ட் ராமசாமி இருவரும் சேர்ந்து ‘கொங்குநாடு முன்னேற்ற கழகம்’ என்ற கட்சியைச் தொடங்கினார்கள். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் தனித்துப் போட்டியிட்ட இந்தக் கட்சி, சுமார் 5 லட்சத்து 78 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது.

x