நாராயணசாமி vs கிரண்பேடி- புதுவைக்கும் பற்றிய வங்கத்து நெருப்பு!


கரு.முத்து, செ.ஞானப்பிரகாஷ்

மத்திய அரசுக்கு எதிராக வங்கத்தில் மம்தா பற்றவைத்த நெருப்பு புதுவைக்கும் பற்றியிருக்கிறது!

புதுவையின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் மோதல் முற்றிவந்த நிலையில், ஆளுநர் மாளிகை வாசலில் கடந்த 13-ம் தேதி திடீர் தர்ணாவில் குதித்தார் நாராயணசாமி. இதனால், 15 மணி நேரம் ராஜ்நிவாஸுக்குள் அகப்பட்டுக்கொண்ட கிரண்பேடி, கடைசியில் துணைநிலை ராணுவ பாதுகாப்புடன் மாளிகையை விட்டு வெளியேறினார். மாளிகையியில் ஆளுநர் இல்லையென்றாலும் அவரிடம் அளித்துள்ள 39 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை போராட்டத்தைத் தொடரப்போவதாக அறிவித்து அடுத்தடுத்த நாட்களும் அமைச்சர்கள் சகிதம் தர்ணாவைத் தொடர்ந்தார் நாராயணசாமி.

துணைநிலை ஆளுநரை வைத்து டெல்லி மாநில அரசை மத்திய அரசு முடக்குவதாக முதல் ஆளாக பிரச்சினையைக் கிளப்பினார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். அவரைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு உள்ளிட்டோரும் தர்ணா, பேரணி என மத்திய அரசுக்கு எதிராகக் கிளர்ந்தார்கள். அவர்கள் வழியில் நாராயணசாமியும் களத்தில் இறங்கியிருக்கிறார்.

x