எனது குடும்பம் பாஜக குடும்பம்- அமித் ஷா வழியில் அனல் பறக்கும் நூதன பிரச்சாரம்!


என்.பாரதி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, “கழகங்கள் இல்லாத தமி ழகம்…கவலைகள் இல்லாத தமிழர்கள்” என்று முழங்கிய பாஜக, இப்போது காட்சிகள் மாறுவதால் “மீண்டும் மோடி… வேண்டும் மோடி” என்ற கோஷத்தைக் கையில் எடுத்திருக்கிறது.

தேர்தலை முன்னிறுத்தி சமூக வலைதளங்களைக் கையாள்வது குறித்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு முன்கூட்டியே உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அப்படி பயிற்சி எடுத்தவர்கள்தான் இந்த கோஷத்தை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்வதில் புகுந்து விளையாடுகின்றனர். அடுத்ததாக,“நபர்களை மையப்படுத்தாமல், இல்லங்களை மையப்படுத்துங்கள்” என பாஜகவினரை உற்சாகப்படுத்திய அமித் ஷா , கடந்த 12-ம் தேதி தனது வீட்டில் பாஜக கொடியைக் கட்டி அதைப் படம் எடுத்து சமூக வலைதளத்தில் விட்டார். உடனே, நாடு முழுவதும் உள்ள தீவிர பாஜககாரர்கள் அமித் ஷாவின் வழியில் தங்கள் இல்லங்களிலும் பாஜக கொடியைக் கட்டி அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்கள்.

தமிழக பாஜகவினரும், “எனது குடும்பம் பாஜக குடும்பம்’’என வீடுகளில் கட்சிக் கொடிகளைக் கட்டி குடும்பத்துடன்நின்று படமெடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதுகுறித்து பாஜகவின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் விசுவிடம் பேசினோம். “கடந்த 2014 தேர்தலில் நமோ பேரவை மூலம் பொதுமக்களும் கட்சிக்கு வேலை செய்தனர். இப்போது அதேபோல் `மீண்டும் மோடி…வேண்டும் மோடி’ என்று நாங்கள் எழுப்பிய கோஷம் பொதுமக்களையும் ‘ஆம், மோடி மீண்டும் வேண்டும்’ என சொல்ல வைத்துள்ளது.

x