இரா.வினோத்
எவரும் நெருங்க முடியாத உயரத்திலும் அதிகாரத்திலும் இருந்த ‘இரும்பு மனுஷி' ஜெயலலிதாவின் நிழலாக இருந்தவர் சசிகலா. 25 ஆண்டுகள் தோழியின் நிழலில் இருந்ததாலே உயரத்தையும் அதிகாரத்தையும் எளிதாக தொட்ட சசிகலா, கடந்த 2 ஆண்டுகளாய் சிறைக் கம்பிகளின் நிழலில் உழல்கிறார். ஜெயலலிதாவின் நட்பினால் அவர் பெற்றதும் இழந்ததும் அதிகம்!
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், சசிகலா முதல்வர் நாற்காலியைப் பிடிக்க கச்சிதமாக காய் நகர்த்திக்கொண்டிருந்த வேளையில் இயற்கை வேறு மாதிரியாக விளையாட்டுக் காட்டியது. அதைத் தாங்க முடியாமல் ஜெயலலிதா சமாதியில் ஓங்கி அடித்து சத்தியம் செய்துவிட்டு, பெங்களூருவுக்குப் புறப்பட்டார் சசிகலா. 2017 பிப்ரவரி 15-ம் தேதி மாலை 5.30 மணிக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் அடைந்த அவர் கடந்த 15-ம் தேதியுடன் சரிபாதி தண்டனை காலத்தை நிறைவு செய்திருக்கிறார்.
அறை எண் 3295; கைதி எண் 9234