கா.இசக்கி முத்து
“நான் நடிச்ச படங்கள்லயே ரிலீஸுக்கு முன்பு அதிகமுறை பார்த்த படம் ‘கண்ணே கலைமானே'. 15 தடவைக்கு மேல பார்த்துட்டேன். வீட்ல இருக்கிறவங்க எல்லாம் பார்த்துட்டு, ‘ஏன் இன்னும் ரிலீஸ் பண்ணாம வெச்சுருக்க'னு சத்தம் போட்டாங்க" என்று உதயநிதி பேசும்போது, அவருடைய வார்த்தைகளில் அவ்வளவு நம்பிக்கை. வழக்கமான சினிமா பேட்டியைத் தவிர்த்துவிட்டு அவரிடம் கொஞ்சம் அரசியல் பேசினேன்.
இப்ப அரசியல்லயும் அதிரடி கிளப்புறீங்க... இனிமே எப்படி படங்களை ஒப்புக்கொள்ளத் திட்டம்..?
‘கண்ணே கலைமானே’க்கு பிறகு 3 படங்கள்ல நடிச்சுட்டு இருக்கேன். ஏப்ரல், மே மாதம் மக்களவைத் தேர்தலுக்காகத் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்யப் போறேன். அதுக்கேத்தாப்புல படங்களை ஷெட்யூல் பண்ணிக்கிட்டு அரசியல்ல அப்பாவுக்குத் துணையா இருப்பேன்.