பட்டாளக்காரனின் விவாகம்


என்.சுவாமிநாதன்

ஆர்யஸ்ரீயும், ஸ்ரீராமும் எல்.கே.ஜி வகுப்புத் தோழமைகள். அன்றைய நாளில் பள்ளியின் ஆண்டுவிழா ஏற்பாடுகள் களைகட்டி இருந்தன. இதில் ‘பட்டாளக்காரனின் விவாகம் (ராணுவ வீரரின் கல்யாணம்)’ என்னும் நாடகத்தில் இருவரும் சேர்ந்து நடித்தனர். ஸ்ரீராமுக்கு ராணுவ வீரர் பாத்திரம். அவர் திருமணம் முடிக்கும் பெண்ணாக ஆர்யஸ்ரீ நடித்தார். 22 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிவிழாவில் நடந்த இந்த நாடகம் அப்படியே நிஜமான ஆச்சரியம் கேரளத்தில் நடந்திருக்கிறது!

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணி செய்து வந்தார் சந்தியா. இதே பள்ளியில் மினி என்பவரும் ஆசிரியையாகப் பணி செய்தார். ஒரே இடத்தில் பணி செய்ததால் சந்தியாவும், மினியும் தோழிகள் ஆனார்கள். திருமணமாகி இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க, சந்தியாவுக்கு ஆண்குழந்தையும், மினிக்கு பெண்குழந்தையும் பிறந்தது. ஸ்ரீராம், ஆர்யஸ்ரீ எனப் பெயரிடப்பட்ட அந்தக் குழந்தைகளைப் பெற்றோர்கள் ஒரே பள்ளியில் சேர்த்து படிக்கவும் வைத்தனர்.

இவர்கள் எல்.கே.ஜி படித்தபோது பள்ளியின் ஆண்டுவிழாவுக்காக ஆசிரியர் ரசீத் என்பவர், ஒரு நாடகம் எழுதினார். ‘பட்டாளக்காரனின் விவாகம்’ எனப் பெயரிடப்பட்ட அந்த நாடகத்தில் ஸ்ரீராமும் ஆர்யஸ்ரீயும் ஜோடியாக நடித்தனர். இது நடந்து 22 ஆண்டுகள் கழித்து திடீரென ஆசிரியர் ரசீத்தின் வீட்டுக்குப் போன ஆர்யஸ்ரீயும் ஸ்ரீராமும் தங்களை அவரது முன்னாள் மாணவர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு தங்களது திருமண அழைப்பிதழைக் கொடுத்தனர்.

x