பிடித்தவை 10: எழுத்தாளர் ஜாக்குலின் மேரி


என்.பாரதி

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாக்குலின் மேரி. வழக்கறிஞரான இவர் மூன்று  நூல்களும் எழுதியுள்ளார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை முன்வைத்து ‘குத்தகை ஒப்பந்தம் 999’, மீனவ மக்களின் வாழ்வு நகர்தலை மையப்படுத்தி ‘சமுத்திரத்தின் சக்கரவர்த்திகள் முக்குவர்’ என இவர் எழுதிய நூல்கள் குமரியில் வரவேற்பைப் பெற்றவை. அண்மையில் இவர் எழுதிய ‘கடலில் பெய்த மழை’ என்னும் சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் அசோகமித்ரா படைப்பூக்க விருது பெற்றது. ஜாக்குலினுக்குப் பிடித்தவை பத்து இங்கே…

ஊர்: எனது சொந்த ஊரான தூத்தூர். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கும் சுறா வேட்டைக்கும் பெயர் பெற்ற மீனவ கிராமம் இது. கடலோடி மக்களின் வாழ்வு நகர்தலைப் பார்த்து வளர்ந்த இடமும் இதுதான்.

தலம்: நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, புத்தகங்களுடன் பொழுதைக் கழிப்பது, குழந்தைகளுடன் நேரத்தைக் கடத்துவது ஆகிய நேரங்களில் எந்த இடமானாலும் அது பிடித்த தலம் ஆகிவிடுகிறது.

x