எங்க குல சாமி 9- இந்த வாரம்: தமிழிசை சவுந்தரராஜன்


என்.சுவாமிநாதன்

பெருமாநல்லூர் பெரியசாமி

தமிழக பாஜக தலைவரும் பாஜகவின் நம்பிக்கை தரும் பெண் ஆளுமைகளில் ஒருவருமான தமிழிசை சவுந்தரராஜனிடம், “உங்க குலதெய்வம் பத்தி பேசணுமே...” என்றேன். கொஞ்சமும் யோசிக்காமல், “குலசாமியைப் பற்றி பேச நேரம் காலமே பார்க்கக்கூடாது. உடனே பேசிடலாமே’’ என்று உற்சாகமானார்.

திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் உள்ள பெரியசாமி கோயில்தான் தமிழிசைக்கு குலதெய்வம். இதே பெருமாநல்லூரில்தான் கடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இடத்துக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள்தான் இருக்கிறது தமிழிசையின் குலசாமி கோயில். “திருப்பூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் எங்களுக்கு பெரிய வெற்றிக் கூட்டமா அமைஞ்சுது.

x