மதுரை திமுகவில் மீண்டும் சி.ஆர்!- அழகிரி சிங்கம் என்ன செய்ய காத்திருக்கிறதோ?


கே.கே.மகேஷ்

கட்சியில் இருக்கும் முன்னணியினரே களமிறங்கத் தயங்கும் மதுரை மக்களவைத் தொகுதிக்கு வேட்பாளர் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதே நேரத்தில், பாஜக சார்பில் அழகிரியின் அண்டர்கிரவுண்டு ஆதரவுடன் சிங்கம் ஏதும் களமிறங்கிவிடக்கூடாது என்ற தவிப்பும் அவரிடம் இருக்கிறது.

ஊராட்சி சபை கூட்டம்

எந்தத் தேர்தல் வந்தாலும் அது திமுகவுக்கே சாதகம் என்கிற நினைப்பில் பம்பரமாகச் சுற்றிவருகிறார் மு.க.ஸ்டாலின். ஆடு மேய்ச்சாப்லயும் ஆச்சு, அண்ணனுக்குப் பொண்ணு பார்த்தாப்லயும் ஆச்சு என்ற கதையாக அவர் நடத்துகிற ஊராட்சி சபை கூட்டங்களில் பெரும்பாலானவை இடைத்தேர்தலுக்குக் காத்திருக்கிற தொகுதிகளுக்குள் வருகிறபடி திட்டம் வகுத்திருந்தது திமுக. இதன்படி, கடந்த 4, 5-ம் தேதிகளில் சாத்தூர் தொகுதியில் உள்ள சத்திரப்பட்டியிலும், திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள தனக்கன்குளத்திலும், மானாமதுரை தொகுதியிலுள்ள கீழடியிலும், பரமக்குடி தொகுதியிலுள்ள வேந்தோணியிலும் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தினார் ஸ்டாலின். கூடவே, அந்தத் தொகுதிகள் அனைத்திலும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தையும் தனியாக நடத்தினார் அவர்.

x