தோல்வியின் விளிம்பில் வெற்றி


திரைபாரதி

அரசு வேலையில் சேர்ந்த 17-வது நாள் அதை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார் அந்த இளைஞர். அவர்தான் தமிழ்த் திரையுலகில் ‘ரிஸ்க் டைரக்டர்’ சிஎச்என் என்று அழைக்கப்பட்ட ‘சித்ரப்பு’ நாராயணமூர்த்தி.

சுந்தரும் (சிவாஜி கணேசன்) சுமதியும் (பத்மினி) மனமொன்றிய காதலர்கள். ஆனால், விதி இவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது. காதலன் இறந்துவிட்டதாக எண்ணி, தன் குடும்பத்தை துன்பச் சிலுவையிலிருந்து காப்பாற்ற தன்னைவிட 20 வயது முதியவரை மணந்துகொள்கிறாள் சுமதி. மணாளன், தனது காதலனின் அப்பா (வி.நாகையா) என்பது அவளுக்குத் தெரியாது. தான் மணந்துகொண்ட பெண், மகனின் காதலி என்பது அந்தப் பெரிய வருக்கும் தெரியாது. விமான விபத்தில் சிக்கிப் பார்வை இழந்துவிட்ட சுந்தர் உயிருடன் திரும்பி வருகிறான். தந்தைக்கோ மகன் திரும்பக் கிடைத்து விட்ட மகிழ்ச்சி. மகனுக்கோ காதலியைக் காண வேண்டும் என்ற தவிப்பு.

தனது விருப்பத்தைத் தந்தையிடம் தெரிவிக்கிறான், கண்ணொளியை இழந்தாலும் நெஞ்சில் காதல் ஜோதியை அணைத்துவிடாத மகன். கொட்டும் மழையில் மகனைக் கை ரிக்‌ஷாவில் அமர்த்திக் கூட்டிச்செல்கிறார் தந்தை.

x