இதுதான் எனக்கு சோறு போடுது!


கா.சு.வேலாயுதன்

அவருக்கு அறுபது வயதிருக்கும். ஒடிசலான தேகம். தெளிவான பார்வை. கோவை டவுன்ஹால் விக்டோரியா மாமன்றத்தின் முன்னால் நடைபாதையில் தனது கடையைப் பரப்பியிருந்தார் சயாஜி.

மக்கள் நெரிசலான சென்னை பாண்டிபஜார், மதுரை மாட்டுத்தாவணி, திருச்சி காந்தி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களிலும் திருவிழாக் காலங்களில் உங்கள் ஊர்களிலும் நீங்களும்கூட சயாஜியைக் கடந்து போயிருக்கலாம். அப்படி நிமிடங்களில் கடந்து செல்பவர்களையும் தன் பக்கம் ஈர்த்து விடும் படைப்புகளுடன் கடை விரித்திருக்கிறார் நாக்பூர் சயாஜி. அப்படித்தான் நானும் அன்று அவரால் ஈர்க்கப்பட்டேன்.

நாடோடி வாழ்க்கையைக் கொண்ட சயாஜியின் கைவண்ணத்தில், கொஞ்சும் ஜோடிப் புறாக்கள், தோகை விரித்தாடும் அழகு மயில், பறக்க எத்தனிக்கிற கழுகு, காதல் கிளிகள் என விதவிதமான பறவைகள் எம்ப்ராய்டரிங் துணிகளில் அழகு வண்ணங்களில் மிளிர்கின்றன.

x