சொல்லுறத  சொல்லிப்புட்டேன்... - நாஞ்சில் சந்திரபாபு!


என்.பாரதி
readers@kamadenu.in

ல்லியான தேகம், தலையில் ஒரு தொப்பி, உடலைச்சுற்றி இருக்கும் துணியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாசகங்கள் சகிதம் சைக்கிள் மிதித்து வருகிறார் அந்தப் பெரியவர். நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் போக்குவரத்து போலீஸார் ஹெல்மெட் இல்லாமல் வருபவர்களை நிறுத்தி ஓரங்கட்டுகிறார்கள். அதன் அருகிலேயே சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு தனது பிரசங்கத்தைத் தொடங்குகிறார் பெரியவர்.

“சொல்லுறதை சொல்லிப்புட்டேன். செய்யுறதை செஞ்சுடுங்க! நல்லதுன்னா கேட்டுக்கங்க… கெட்டதுன்னா விட்டுருங்க” என சந்திரபாபு பாடலோடு பிரசங்கம் தொடங்குகிறது. பாட்டு மட்டுமல்ல... அதற்கேற்ப உடலை அசைத்து ஆடவும் செய்கிறார். கூட்டம் கூடியதும் பிளாஸ்டிக்தடை குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வினியோகித்துவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்கிறார். அங்கும் இதேபோல் ஆட்டம் பாட்டம் பிரச்சாரம் தொடர்கிறது!

சந்திரபாபு ரசிகரான இவர், மார்ச் 8-ம் தேதி சந்திரபாபு நினைவுநாளில் அவரது நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துவதையும் வழக்கமான வைத்திருக்கிறார். அதனால், ‘நாஞ்சில் சந்திரபாபு’ என்று அழைக்குமளவுக்கு பெயர்பெற்றிருக்கிறார். பிரச்சாரம் முடிந்து நின்றவரை ஓரம்கட்டிப் பேசினேன்.

x