நிலவு கொடுத்த பூங்கொத்து!


தம்பி

நிலவில் மனிதனின் கால் பட்டு இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் ஆகின்றன. நிலவில் இறங்கியபோது “இது ஒரு மனிதனின் சிறிய காலடி. மனித குலத்துக்கோ பெரிய பாய்ச்சல்” என்று நீல் ஆம்ஸ்ட்ராங் பேசிய வாசகம் மிகவும் உலகப் புகழ்பெற்றது. 50 ஆண்டுகள் கழித்து இன்னொரு பெரிய பாய்ச்சல் நிலவில் நிகழ்ந்திருக்கிறது. இம்முறை அந்தப் பாய்ச்சலை நிகழ்த்தியிருப்பது சின்னஞ்சிறிய பருத்தி விதையொன்று!

சீனா அனுப்பிய ‘நிலவு இறங்குகல’மான (Lunar lander) சாங்’ஈ-4 கடந்த ஜனவரி மூன்றாம் தேதி நிலவில் தரையிறங்கியது. அந்தக் கலத்தில் அனுப்பப்பட்ட கொள்கலம் ஒன்றில்தான் பருத்தி விதையொன்று துளிர்விட்டிருக்கிறது.

நாம் தினமும் பார்ப்பது நிலவின் ஒரு பக்கம்தான். இதுவரை நிலவுக்குச் சென்ற ஆளில்லா விண்கலங்கள், மனிதர்களைச் சுமந்து சென்ற விண்கலங்கள் எல்லாமே நம்மை நோக்கி இருக்கும் நிலவின் முகத்தில்தான் இறங்கியிருக்கின்றன. அதன் பின்னந்தலையில் இறங்கவேயில்லை. பின்னந்தலை என்றால் அங்கே இருட்டாக இருக்கும் என்று அர்த்தமில்லை. பூமியிலிருந்து பார்க்க முடியாது அவ்வளவுதான். அந்த இடத்தில் முதன்முதலில் இறங்கியது சாங்’ஈ-4 கலம்தான். சீனத்தின் நிலவு தெய்வத்தின் பெயரைத்தான் இந்தக் கலத்துக்கும் வைத்திருக்கிரார்கள்.

x