டில்லியில் கிளம்பிய ‘தெகல்கா’ பூதம்!- பாயுமா... பதுங்குமா..?


கா.சு.வேலாயுதன்

கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் 5 பேர் மர்ம மரணங்கள் விவகாரத்தில் முதல்வர் பழனிசாமிக்கும் தொடர்பு உண்டு என்று ‘தெகல்கா’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் டெல்லியில் குறும்படம் வெளியிட்டதிலிருந்து கோடநாடு அரசியல் கொடிகட்டாமலேயே பறக்கிறது!

கோடநாடு - கோத்தகிரியிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம். 1992-ல் ஜெயலலிதா-சசிகலா இங்கு அடியெடுத்து வைத்ததிலிருந்தே சர்ச்சைகளுக்கும் சக்கரம் முளைக்க ஆரம்பித்துவிட்டது. கோடநாடு பங்களாவுக்குள் நடக்கும் விஷயங்களை ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே திகில் சினிமா ரேஞ்சுக்கு விவரிப்பார்கள்.

இந்த நிலையில், ஜெயலலிதா இறந்த சில மாதங்களில் 2017 ஏப்ரல் 24-ம் தேதி கோடநாடு பங்களாவுக்குள் ஒரு கொள்ளைக்கும்பல் புகுந்தது. அப்போது அங்கிருந்த காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர் அரிவாளால் வெட்டப்பட்டார். ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான சேலம் கனகராஜ்தான் இந்தக் கொள்ளைச் சம்பவத்தை கேரள கூலிப்படையை வைத்து செய்திருப்பதாகச் சொன்ன போலீஸார், பங்களாவிலிருந்து திருடுபோன பொருட்களின் விவரத்தை முழுமையாகத் தெரிவிக்கவில்லை.

x