மாமா எப்போ வருவே?- இவர்களுடன் இக்னேஷியஸ்...


என்.சுவாமிநாதன்

பெரும்பாலும் ஆசிரமங்கள் நடத்துபவர்கள் நன்கொடைகளுக்குத் தவமிருப்பார்கள். ஆனால், அரசு தருவதாகச் சொன்ன உதவியையே தவிர்த்துவிட்டு, மனநலம் பாதித்தவர்களுக்காக ஒரு ஆசிரமத்தை நடத்துகிறார் இக்னேஷியஸ்!

நாகர்கோவிலை அடுத்த கோழிக்கோட்டுப் பொத்தையில் இருக்கிறது இக்னேஷியஸின் ‘அன்னை ஆசிரமம்’. முழுக்க ஆண் மனநோயாளிகளுக்காகவே இந்த ஆசிரமத்தை நடந்தும் இக்னேஷியஸ் அங்கிருக்கும் அன்புப் பிள்ளைகளுக்காகவே திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். அரைநிக்கர் போட்டுக்கொண்டு அவர்களில் ஒருவரைப் போலவே சுற்றுகிறார். அவர்கள் கையில் இருக்கும் உணவை எவ்வித தயக்கமும் இன்றி வாங்கி உண்கிறார். அந்தக் குழந்தைகளோ இவரை, “மாமா” என்றே வாஞ்சை பொங்க அழைக்கிறார்கள். நம்மிடம் தனியாகப் பேசுவதற்காக இக்னேஷியஸ் சற்றே நகர்ந்தபோதும், “மாமா நீ எப்போ வருவே?” என்று அடிக்கடி வந்து எட்டிப் பார்க்கிறார்கள் அந்தக் குழந்தைகள்.

அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டு நம்மிடம் பேசுகிறார் இக்னேஷியஸ். “எங்கப்பா வேகப்பன் கீழஆசாரிப்பள்ளம் சர்ச்சில் கணக்குப்பிள்ளையா இருந்தாங்க. அஞ்சு ஆணும், அஞ்சு பொண்ணுமா எங்க வீட்டுல மொத்தம் 10 பிள்ளைங்க. அதில் ஆம்பளை பிள்ளைங்கள்ல இப்ப நான் மட்டும்தான் இருக்கேன். ஆரம்பத்துல பெரியாரிஸ்டா இருந்தேன். இப்போ ஆன்மிகவாதி. வயது ஏற ஏற புரிதல்களும் மாறும்தானே?

x