ராஜ்கிரணும் ரம்பை இலையும்!


என்.பாரதி

திரைப்படங்களில் ராஜ்கிரண் நல்லி எலும்பை கடித்துச் சுவைப்பதைப் பார்த்தாலே அசைவப் பிரியர்களுக்கு நா ஊறும். சினிமாவில் நடிப்புக்காகச் செய்வது மட்டுமல்ல... இயல்பிலும் ராஜ்கிரண் அப்படித்தான். அசைவ உணவுகளுக்கு மணம் சேர்த்து சுவையைக் கூட்டுவதில் ரம்பை இலைக்கு முக்கியப் பங்கு உண்டு. அந்த ரம்பை இலையைத் தனது முகநூல் நண்பர் ஒருவர் வீட்டுத் தோட்டத்தில் வளர்ப்பதைக் கேள்விப்பட்டு அதை சென்னைக்குத் தருவித்து தனது வீட்டில் வளர்த்துக் கொண்டிருக்கிறார் ராஜ்கிரண்.

குமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர் தக்கலை ஹலீமா. ஓய்வுபெற்ற துணை ஆட்சியரான இவர் வரலாற்றுத் தேடல், இலக்கியம் என இயங்கி வருபவர். முகநூலிலும் குமரி மாவட்ட வரலாற்றுத் தகவல்களை எழுதிக் குவிப்பவர். அப்படித்தான் ஒருநாள், இஸ்லாமிய உணவுக் கலாச்சாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ரம்பை இலை குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் எழுதினார் ஹலீமா. இதைப் படித்துவிட்டு இவரது முகநூல் நண்பரான நடிகர் ராஜ்கிரண், ரம்பை இலை செடியைத் தனது வீட்டிலும் வளர்க்க ஆசைப்படும் தனது பிரியத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

இதையடுத்து, அண்மையில் சென்னை சென்ற தக்கலை ஹலீமா, ராஜ்கிரண் வீட்டுக்கே சென்று ரம்பை இலைச் செடியைத் தந்துவிட்டு வந்திருக்கிறார். அந்தச் செடி இப்போது ராஜ்கிரண் வீட்டிலும் வளர்கிறது. இந்தத் தகவலை என்னிடம் மகிழ்வுடன் பகிர்ந்துகொண்ட ஹலீமா “முகநூலில் நான் எழுதும் வரலாற்றுப் பண்பாடு, மண் சார்ந்த பதிவுகளை ராஜ்கிரண் சார் விரும்பிப் படிச்சுட்டு கருத்துச் சொல்லுவார். அந்த விதத்துல, உணவுப் பண்பாட்டை எழுதுறப்ப ரம்பை இலை பத்தியும் எழுதினேன். பிரியாணி வகை உணவுகளில் ரம்பை இலை பிரதானம்.

x