பிடித்தவை 10: கட்டுரையாளர் இர.ஜோதிமீனா


என்.பாரதி

இர.ஜோதிமீனா. நெல்லைச் சீமையில் பிறந்து வளர்ந்தவர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது கோவையில் வசிக்கிறார். கல்லூரி, பல்கலைக் கழகங்களில் நடந்த கருத்தரங்கங்கள், மாநாடுகளில் தமிழ்மொழி, பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் குறித்த ஆய்வுக்கட்டுரைகள் எழுதி சமர்ப்பித்துப் பேசியிருக்கிறார். மார்க்சிய அறிஞர் கோவை ஞானி நடத்திய தமிழ்நேயம் இதழில் பணியாற்றியவர். தற்போது அவரது இலக்கியப் பணிக்கு உதவியாளராகவும் இருந்து வருகிறார். புதுப்புனல் உள்ளிட்ட சிற்றிதழ்களிலும் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ‘தமிழறிஞர் நா.நளினி தேவி’ என்ற ஆய்வு நூலுக்கும் ‘தமிழியல் ஆய்வுகள் - தமிழ்நேயத்தின் பார்வை’- என்ற கட்டுரை நூலுக்கும் சொந்தக்காரர். அவருக்குப் பிடித்த பத்து இங்கே...

ஆளுமை: ஏறு போல் நடந்து, வீறு நடை போட்டு, தேசிய விடுதலையும், பெண் விடுதலையும் வேண்டி ஓங்கிக் குரல் கொடுத்த மகாகவி பாரதி.
நூல்: ‘தன்நெஞ்ச றிவது பொய்யற்க பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் ’ என்று நேர்மையாகப் பேசும் தமிழின் / தமிழரின் உலகப் பொது மறை திருக்குறள்.

காப்பியம்: மணிமேகலை. பெண் முதன்மை என்பதோடு பல்வேறு இன்னல்களையும், தடைகளையும் தகர்த்து, சமூக அறம் உரைத்தவள். இவ்வுலக வாழ்வுக்கு உணவும் உறைவிடமும் தடையின்றி கிடைக்கச் செய்தால் மனிதனின் துன்பமும் துயரமும் நீங்கும் என்ற பேரறத்தை பெண் வழியே உணர்த்திய கதை. புனைவு என்றாலும் மாந்தர் இனத்தின் தேவையும் இதுவே!

x