எங்க குலசாமி 5 - இந்த வாரம்: கே.எஸ்.அழகிரி


கரு.முத்து

அய்யனாரப்பன்

பெரும்பாலான ஊர்களில் அய்யனார்தான் எல்லை தெய்வமாக நின்று ஊரைக்காப்பார். சங்ககாலம் தொட்டே அய்யனார் வழிபாடு இருக்கிறது. பவுத்தர்கள் அல்லது சமணர்களின் வழிபாட்டு தெய்வமாக அய்யனார் இருந்திருக்கலாம் என்பது அறிஞர்களின் கூற்று. அது நாளடைவில் குறுகி சிறுதெய்வ வழிபாடாக மாறியிருக்கிறது. அய்யனார் சில இடங்களில் ‘அய்யனாரப்பன்’ என்ற பெயரிலும் வழிபடப்படுவதுண்டு.

அப்படி நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள கடைக்கண் விநாயகநல்லூர் மந்தையில் இருக்கும் அய்யனாரப்பன்தான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி-யும் முன்னாள் எம்எல்ஏ-வுமான கே.எஸ்.அழகிரியின் குலதெய்வம்.

x