கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பம் என்னுடையது- சுதா ரகுநாதன்


நா.இரமேஷ்குமார்

மார்கழியின் பின்பனி பொழிவின் மாலை வேளையில் இசைக்குயில் சுதா ரகுநாதனைச் சந்திக்கக் காத்திருந்தேன். வெண்பட்டு உடுத்தி வீணையுடன் வரவேற்கும் கலைவாணியைத் தாண்டிச் சென்றால், ‘சங்கீத கலாநிதி’, ‘சங்கீத நிபுணா’ எனச் சுவரெங்கும் நேர்த்தியாய் மாட்டி வைக்கப்பட்டுள்ள பட்டங்களும், அடுக்கப்பட்டிருக்கிற கோப்பைகளும், கேடயங்களும் சூழலுக்கு மேலும் ரம்யம் கூட்டுகின்றன. வரவேற்பறையில் தலைக்கு கை வைத்து குதூகலமாய் சிரித்தபடியே கவனித்துக் கொண்டிருந்தார் பிள்ளையார்.

அட! அரக்கன் துராசதனை அழிக்க உமையின் திருவருளால் உதித்த துந்தி கணபதி, வெள்ளெருக்கு விநாயகர், ஸ்படிக விநாயகர், பாசமான பிள்ளையார் எனக் கிடைக்கிற இடங்களில் எல்லாம் பிள்ளையார், குடும்பத்தை ஆசிர்வதித்துக் கொண்டிருந்தார். பட்டுப்புடவை சரசரக்க, டிரேட் மார்க் புன்னகையில் ‘பேட்டியை ஆரம்பிக்கலாமா’ என்றபடியே வந்தமர்கிறார் சுதா ரகுநாதன்.

இன்னமும் உற்சாகம் குறையாமல் எப்படி உங்களுடைய பயணம் தொடருது... 5,6 மணி நேரம் கச்சேரிக்காக தயாராகும் எனர்ஜி எப்படிக் கிடைக்கிறது?

x