எங்க குலசாமி 4- இந்த வாரம்: சீமான்


கே.கே.மகேஷ்

ஒருகாலத்தில், “கடவுள் இல்லை... இல்லவே இல்லை” என்று முழங்கிய ‘நாம் தமிழர்’ கட்சித் தலைவர் சீமான், இப்போது குலதெய்வ வழிபாட்டுப் பக்கம் தனது தொண்டர்களைத் திருப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார்.

“தமிழர்களின் மெய்யியலே குலதெய்வ வழிபாடுதான். ஊரே நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தபோது திருடனோ, வேற்று நாட்டுக்காரனோ படையெடுத்து வந்துவிடக்கூடாது என்று காவல் காத்து நின்றானே, அவனை வழிபடுவதுதான் குல தெய்வ வழிபாடு. எதிரியை வீழ்த்தி தானும் செத்துக்கிடப்பான். காலையில் மக்கள் எழுந்துபோய் பார்ப்பார்கள். ஊரைக் காக்க செத்துப்போயிட்டான் என்று பாராட்டி நடுகல் நட்டு, ஊர் எல்லையிலேயே அவனை காவல் தெய்வமாக வைத்து வணங்க ஆரம்பிப்பார்கள்.

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் மனிதருள் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்று சொல்கிறார் வள்ளுவர். ஒருத்தரை நல்ல மனுஷன் என்போம். ரொம்ப ரொம்ப நல்லவராக இருந்தால், ‘ரொம்ப நல்ல மனுஷன்’, ‘ரொம்ப ரொம்ப நல்ல மனுஷன்’ என்போம். அதுக்கும் மேல இருக்கிற மனுஷனை என்ன வார்த்தை சொல்லி புகழ்வது? ‘அவன் தெய்வமப்பா’ என்கிறோம். சுடலைமாடன், முனீஸ்வரன், இருளப்பசாமி எல்லாம் அப்படி சாமியானவங்கதான். கற்புக்காக இறந்த கண்ணகி தொடங்கி, தமிழ் மண்ணைக் காப்பதற்காக உயிர்விட்ட தமிழ் ஈழப்போராளிகளும், மொழிப்போர் தியாகிகளும்கூட தமிழினத்தின் குல தெய்வங்கள்தான்.

x