பிடித்தவை 10- எழுத்தாளர் சப்திகா


என்.சுவாமிநாதன்

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள சைமன் காலனியைப் பூர்வீகமாகக் கொண்டவர் சப்திகா. தற்போது பள்ளம் கடற்கரை கிராமத்தில் வசிக்கும் இவர், ‘கடலோடிக் கதைகள்’ என்னும் சிறுகதைத் தொகுப்புக்குச் சொந்தக்காரர். சாத்தான் குளம் அருகில் ஞானியார் குடியிருப்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருக்கும் இவர், தொடர்ந்து இலக்கியத்துறையிலும் இயங்கி வருகிறார்.

ஓகி புயல் தாக்கியதை மையமாகக் கொண்டு ‘கடலோடி’ என்னும் சிறுகதையை எழுதியவர், அது தந்த ஊக்கத்தில் தன் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். தற்போது, மீனவப் பெண்களின் திருமணம், வரதட்சணை உள்ளிட்ட சமூக பிரச்சினைகளை மையப்படுத்தி குறுநாவல் ஒன்றையும் எழுதிவரும் சப்திகாவுக்குப் பிடித்தவை பத்து இங்கே…

ஆளுமை: பேச்சாளர் முனைவர் பர்வீன் சுல்தானா. கேட்கக் கேட்கத் திகட்டாத தமிழ்மொழியை அவர் கையாளும் விதமும், அவரது பேச்சாற்றலும் கேட்டு பலமுறை அதிசயத்துப் போயிருக்கிறேன்.

x