வால்டர் எனும் நான்..!


என்.சுவாமிநாதன்

'அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தில் முட்டம் கடற்கரையின் அழகை கண்களுக்குப் பந்தி வைத்திருப்பார் இயக்குநர் பாரதிராஜா. அவரது ‘கடலோர கவிதைகளும்’ முட்டத்தில் எழுதப்பட்டதுதான். அலைகள் ஓய்வதில்லை படப்பிடிப்பின்போது பாரதிராஜாவுக்கு உதவியாக இருந்த மீனவர் வால்டர்தான்  குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் எந்த ஷூட்டிங் நடந்தாலும் இப்போதும் காவலர்!

குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களுக்கு சினிமா ஷூட்டிங் வருபவர்கள் வால்டரைத்தான் முதலில் தேடுகிறார்கள். ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்த வால்டர் அண்மையில், ‘வர்ளம்’ எனும் நாவலை எழுதி வெளியிட்டுள்ளார். சினிமா ஷூட்டிங்குகளுக்கு வழி காட்டுவதோடு மட்டுமில்லாது பல படங்களில் துக்கடா ரோல்களில் தலை காட்டியும் இருக்கிறார்.

“என்னோட அப்பா சிங்கராயன் கடல் தொழிலுக்குப் போறவங்க. இனயம் கிராமத்துல எங்க பாட்டி வீட்டுல இருந்துதான் படிச்சேன். அஞ்சாம் கிளாஸ் படிச்சப்ப பரீட்சை லீவுல வீட்டுக்கு வந்துருந்தேன். அப்ப வீசுன கடுமையான காத்துல எங்க அப்பாவோட கட்டுமரம் முறிஞ்சுடுச்சு. அப்பாவுக்கும் கை, கால்கள்ல காயம். அப்பத்தான் குடும்பத்துக்குச் சோறுபோட நானும் அப்பாவோட சேர்ந்து கடலுக்குப் போக வேண்டியதா போச்சு. அப்புறம் படிக்கிறது எங்க?

x