கொஞ்சநாளைக்கு தொலைஞ்சு போலாமா?- ‘ஸ்கூட்டர் நாடோடி’யின் திகில் பயணம்!


கா.சு.வேலாயுதன்

``தினமும் ஒரே மாதிரியான வேலை. விடிந்து எழுந்தால் திரும்பத் திரும்ப அதே ஓட்டம். இதிலிருந்து விடுபட்டு தற்காலிகமாக எங்காவது தொலைந்து போனால் என்ன?” கோவை சுந்தரபுரத்தைச் சேர்ந்த 25 வயது ரொனால்டு சலோவுக்கு திடீரென இப்படியொரு எண்ணம் வந்தது. உடனே, பழைய ஸ்கூட்டர் ஒன்றை தயார்படுத்திக் கொண்டு கிளம்பிவிட்டார். புதுச்சேரி தொடங்கி கார்கில் வரைக்கும் பயணித்து சுமார் ஒன்பது மாதங்கள் தொலைந்து போனவர், தனது 45 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்தை முடித்துக்கொண்டு கோவை திரும்பியிருக்கிறார்.

 பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக, தனது வீட்டில் உள்ளவர்களை அழைத்து சின்னதாய் ஒரு மீட்டிங் போட்டார். விஷயத்தைச் சொன்னபோது, கண்ணீர் மல்கி நின்றார் அம்மா. “உங்கூட மட்டும் தினமும் ராத்திரி 8 மணிக்கு எங்கிருந்தாலும் பேசுவேன்” என்று சொல்லி தாயின் கண்ணீரைத் துடைத்துவிட்டுப் புறப்பட்டார் எம்இ., பட்டதாரியான ரொனால்டு.

 “ரொனால்டு சலோங்கிறது பாட்டி வச்ச பேரு. ஸ்கூட்டர்ல நாடோடிப் பயணம் தொடங்கியதுமே என்னோட பேரை ‘ஸ்கூட்டர் நடோடி (Scooter nomad) ’ன்னு மாத்திக்கிட்டேன். என்னோட பயணத்தை தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னால இந்த ஸ்கூட்டரைப் பத்தி தெரிஞ்சுக்குங்க” என்றபடியே பேச ஆரம்பித்தார் ரொனால்டு.

x