நாயக பிம்பத்தின் பிரம்மா!


திரைபாரதி

திரைக்கதையின் தேவையை மீறி, கதாநாயகனை மக்களின் காவலனாக மிகைப்படுத்திக் காட்டும் ‘ஹீரோயிசம்’ என்ற அம்சம், எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்திலேயே தொடங்கிவிட்டது. ஆனால், அதைத் தீவிரமாக வளர்த்தெடுத்த தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் முதன்மையானவர் ப. நீலகண்டன்.

கதைக்கருவைத் தாங்கிப் பிடித்து, அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வானொலி நாடகங்களையும் மேடை நாடகங்களையும் எழுதிப் புகழ்பெற்றவர் இவர். பின்னால் எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குநர் என்ற இடத்துக்கு வந்தபோது, அவரது நட்சத்திர மதிப்பை முன்னிட்டு மிகையான ஹீரோயிசத்தைக் கையாள வேண்டிய அவசியம் நீலகண்டனுக்கு ஏற்பட்டது. ஹீரோயிசம் என்றபோதும், தாய்மைக்கு மதிப்பு, குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம், உண்மை, நேர்மை உள்ளிட்ட வாழ்வின் அறமாகக் கொள்ளப்பட வேண்டிய தத்துவங்களைப் பின்பற்றும் முன்மாதிரியாகக் கதாநாயகனின் பிம்பத்தை முன்னிறுத்துவது இவரது பாணி. கதாநாயகனை இக்கட்டான சமயத்தில் ஓடிவந்து கைகொடுக்கும் ‘ஆபத்பாந்தவன்’ அவதாரமாகச் சித்தரிக்கும் அம்சங்கள் ப.நீலகண்டன் பின்பற்றிய திரைமொழியில் நிறைந்திருக்கும்.

பத்திரிகையிலிருந்து திரைக்கு

x