பாஜகவுக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு!- ரோஜா எம்எல்ஏ அதிரடி பேட்டி!


குள.சண்முகசுந்தரம்

சந்திரபாபு நாயுடுவின் மலிவு விலை ‘அண்ணா கேன்டீனுக்கு’ சவாலாக தனது நகரி தொகுதியில் அடுத்தடுத்து மலிவு விலை உணவகங்களைத் திறந்து கொண்டிருக்கிறார் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ-வான நடிகை ரோஜா. கட்சியின் மகளிரணிக்கு மாநிலத் தலைவியாகவும் ஆந்திரத்தில் அதிரடி கிளப்பிக்கொண்டிருக்கும் ரோஜா, சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக சாட்டையடியாய் பேசுகிறார். அதேசமயம் தமிழக அரசியல் குறித்தும் மனதில் பட்டதை பளிச்செனப் பேசுகிறார். “காமதேனு இதழுக்காக ஒரு பேட்டி வேண்டும்” என்றதுமே, “கேளுங்க சொல்றேன்...” என்று உடனேயே பேட்டிக்கு தயாரானார்.

பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறாரே உங்க சிஎம்?

அவர மொதல்ல ஆந்திரப் பிரதேசத்தை சரி பண்ணச் சொல்லுங்க. அப்புறமா இந்திய தேசத்தைப்பத்திக் கவலைப்படலாம். புதுசா யாரையும் இவரு காங்கிரஸ் அணிக்குக் கொண்டு வரலியே... ஏற்கெனவே காங்கிரஸோட இருக்கவங்கட்டத்தானே அழையா விழுந்தாளியா போய் அட்டெண்டெண்ஸ் போட்டுட்டு இருக்காரு! ஆனா, ஒண்ணு மட்டும் சொல்றேன். நாயுடுவோட யாரு கூட்டு சேர்ந்தாலும் அவங்களும் தெருவுக்கு வந்துருவாங்க.

x