எங்களுக்கு இது ராணுவ மரியாதை!- - இது வண்ணம்புத்தூர் வழக்கம்


கரு.முத்து

உயர் பதவியில் இருந்தவர்களுக்கும் ராணுவத்தினர் உள்ளிட்டவர்கள் வீரமரணம் அடையும்போதும்தான் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவதை இப்போது நாம் பார்க்கிறோம். ஆனால், அரியலூர் பக்கம் ஒரு கிராமத்தில், இறந்தவர்களுக்குக் குதிரை, நாய், துப்பாக்கி, ஈட்டி, வாள், வெட்டரிவாள், குறுவாள் ஆகியவற்றுடன் கூடிய அணிவகுப்பு மரியாதை நடத்துவது பல நூறு வருடங்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

திருவையாறு - அரியலூர் சாலையில் திருமானூருக்குப் பக்கத்தில் இருக்கிறது வண்ணம் புத்தூர் கிராமம். பலதரப்பட்ட சமூகத்தினர் இங்கு வசித்தாலும் பார்கவகுல மூப்பனார் சமூகத்தில் தான் மேற்சொன்ன அணிவகுப்பு மரியாதை. குறிப்பாக அந்தச் சமூகத்தில் உள்ள மணியார் மற்றும் கணக்கப்பிள்ளை வகையறாவில் யார் இறந்தாலும் இந்த மரியாதை உண்டு.

வித்தியாசமான இந்த வழக்கம் எப்படி வந்தது? வண்ணம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சீனியர் சிட்டிசன் தங்கையன் விவரமாகப் பேசினார். “முந்நூறு நானூறு வருசத்துக்கு முந்தி இந்தப்பக்கம் பூராவும் ஜமீன்கள் ஆதிக்கத்துல இருந்துச்சு. அப்ப, அரியலூர் ஜமீனும், உடையார்பாளையம் ஜமீனும் தங்களோட செல்வாக்கை காட்ட அடிக்கடி போட்டி போடுவாங்களாம்; நெறையா சண்டையும் நடக்குமாம். அப்ப எங்க ஊருல அலங்கார வாண்டையார்னு ஒரு பெரியவீரன் இருந்திருக்காரு. அவரு வெளியில கெளம்புனாலே குதிரை, நாய், ஈட்டி, வெட்டரிவாள், துப்பாக்கி, வாள், குறுவாள் சகிதம் ஆட்களோடதான் கெளம்புவாரு. அவரு அரியலூர் ஜமீனுக்கு ஆதரவா இருந்ததால உடையார்பாளையம் ஜமீனுக்கு அவரு மேல கோபம். ஆனாலும் அவர ஒண்ணும் பண்ண முடியல.

x