பிடித்தவை 10: எழுத்தாளர் சஷி முரளி


எம்.சோபியா

கரூரைச் சேர்ந்தவரான சஷி முரளி, தன் கணவர் முரளி கிருஷ்ணனின் மருந்து உற்பத்தி தொழிலை கவனிப்பவர். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் திருமணம், குழந்தை என்று வாழ்க்கை நீரோட்டத்தில் கலந்தவர். ரொம்பத் தாமதமாகவே (2014ல்) எழுத வந்தாலும் அதற்குள் 15 நல்ல நாவல்களை எழுதியிருக்கிறார் சஷி. “முதல் நாவலை எழுதி முடித்தேனே தவிர, அதைப் புத்தகமாக வெளியிடும் எண்ணம் இல்லாமல் தொடர்ந்து நான்கு வருடங்கள் எழுதிக் கொண்டிருந்தேன். பப்ளிஷரை எப்படி அணுகுவது, புத்தகம் வெளியிடுவதற்கான நடைமுறை என்ன என்று எதுவும் புரியாமல் இருந்திருக்கிறேன். 

நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தில்தான் 2014-ம் ஆண்டில் எனது முதல் புத்தகம் வெளியானது'' என்று சொல்லும் சஷி முரளி, இப்போது எழுத்தாளர் மட்டுமல்ல... பலரது புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளராகவும் இருக்கிறார். சிறந்த எழுத்தாளர்களையும் எழுத்துக்களையும் தேடிப்பிடிப்பதற்காக, ‘தேடல்’ என்ற பெயரில் மாபெரும் போட்டி நடத்தியது இவரது சமீபத்திய சாதனை. இவருக்குப் பிடித்த 10 இங்கே:

ஆளுமைகள்: முதலில், என் தாய். என்னைச் சுதந்திரமாகச் சிந்திக்கச் செய்து சுயம்புவாக வளரச் செய்தவர். இரண்டாவது, என்னுடைய குரு. என்னுடைய சிந்தனையின் போக்கை பட்டை தீட்டி விட்டவர். மூன்றாவது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் சொல்லித் தந்தவர்.

x