தலைவர் வழியில் தளபதி!


ஆர்டர் அம்மணி... அரளும் மாவட்டங்கள்!

தலைவர் வீட்டுப் பெண்மணி இப்போது அரசியல் விவகாரங்களில் முன்னைவிட அதிகமாக மூக்கை நுழைக்கிறாராம். அதிலும் குறிப்பாக மகனை முன்னிலைப்படுத்தும் விஷயத்தில் மாவட்டச் செயலாளர்களிடம் நேரடியாகவே போனில் அவரே பேசுகிறாராம். “உங்க மாவட்டத்துல தம்பிய வெச்சு பொதுக்கூட்டம் போடுங்க. நலத்திட்ட உதவிகள் வழங்குறதுக்கு ஏற்பாடு செய்யுங்க” என அம்மணி போடும் ஆர்டர்களைப் பார்த்து மாவட்டங்கள் பலரும் அரண்டு போய்க்கிடக்கிறார்கள்.

பினாமிகள் வளைத்த பேருந்துகள்!

கொங்கு மண்டலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இயங்கும் தனியார் பேருந்துகளில் பல அண்மையில், சேலத்தின் அதிமுக்கியப் புள்ளியின் பினாமிகள் கைக்கு மாறியிருக்கின்றன. அரசுப் பேருந்துகள் பலவும், ‘ஒன் டு ஒன்’, ‘பாயின்ட் டு பாயின்ட்’ எனப் பெயர் தாங்கி பறந்துகொண்டிருக்க, அவை தவிர்த்துச் செல்லும் நிறுத்தங்களில் எல்லாம் பயணிகளை ஏற்றி இறக்கி லாபம் சம்பாதிக்கின்றன தனியார் பேருந்துகள். இந்தத் தந்திரத்தைத் தெரிந்துதான் பினாமிகளை வைத்துப் பேருந்துத் தடங்களை வளைத்திருக்கிறாராம் அதிமுக்கியப் புள்ளி.

x