ஊரெல்லாம் ஒரே ‘இட்லி’ மயம்!


கடந்த வார சமூக வலைதள ட்ரெண்ட் ‘இட்லி’ தான். இதுவரை அட்லியைத்தான் இட்லி என்று கிண்டலடித்து மீம் போட்டு வந்தார்கள். கடந்த வாரம் முழுக்க இட்லிக்கே மீம் போடும் நிலை வந்துவிட்டது. அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை எடுத்தபோது உணவுக்கு ஆன செலவு மட்டுமே ரூ. 1.17 கோடி என்று பில் போட்டிருக்கிறது அப்போலோ நிர்வாகம். ‘அம்மா இட்லி சாப்பிட்டார்’ என்று ஏற்கெனவே அடிப்பொடிகள் சொன்னதையும் இதையும் முடிச்சிட்டுத்தான் இணையத்தில் இட்லிமேளா நடந்தது. இதுதான் சாக்கு என்று மீம் கிரியேட்டர்கள் இட்லியை உலக அளவுக்கு ட்ரெண்டாக்கிவிட்டார்கள். ‘அருணாச்சலம் படத்தில் 30 நாளில் 30 கோடியைச் செல
வழிக்க வழி தேடும் ரஜினி, அப்போலோவில் இட்லி சாப்பிட்டிருந்தால் ஈசியா வேலை முடிஞ்சிருக்குமே..!' என்றெல்லாம் வேற லெவலில் கிண்டலடித்தார்கள். பல ஊடகங் களில் ஃபிளாஷ் நியூஸே அப்போலோ இட்லி பற்றிதான். உலகில் எங்கெல்லாம் இட்லி என்ன விலை என்றெல்லாம் பட்டியல் போட்டிருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்!

மாலத்தீவுக்கு 1.4 பில்லியன் டாலர் இந்தியா நிதியுதவி. 
- செய்தி
அவனும் கொஞ்சநாள் கழிச்சு இந்திய ரூபாய் நோட்டு செல்லாதுன்னு சொல்லப் போறான்..!
- ஃபாசில்

துணை முதல்வர் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
- செய்தி 
அப்ப... தேனியில் தர்மயுத்தம் பாகம் 2 ஐ பார்க்கலாம்! 
- அன்புடன் கதிர்

அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு இட்லி கொடுத்த செலவு ஒரு கோடியே பதினேழு லட்சம். 
- செய்தி
ஒருவேளை வைரம் பதிச்ச இட்லியா இருக்குமோ?!
- டி எஸ் மணிகண்டன்

x