உகாண்டாவில் வேலை... கன்னியாகுமரியில் சேவை..!


என்.சுவாமிநாதன்

ஒரு மருத்துவமனையில் நோயாளியின் சாப்பாடு செலவுக்காக ஒரு கோடிக்கு பில் போட்டு திதிலூட்டுகிறார்கள். ஆனால், நாகர்கோவில் இளங்கடை பகுதியில் உள்ள இந்த மருத்துவமனையிலோ வேறுமாதிரியாக வியப்பூட்டுகிறார்கள்!

அப்படி என்ன வியப்பு? குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் உகாண்டாவில் பணி செய்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் சேர்ந்து உருவாக்கியதுதான் இந்த இளங்கடை மருத்துவமனை. ‘உகாசேவா சாரிட்டபிள் டிரஸ்ட்’டின் கீழ் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் மருந்துக்கு மட்டுமே கட்டணம்; மருத்துவ சேவை கிட்டத்தட்ட இலவசம்தான்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய டிரஸ்டின் தலைவர் முகமது கபூர், “உகாண்டாவில் பணிபுரிந்த 300 பேர் சேர்ந்து இந்த டிரஸ்ட்டை 1996-ல் உருவாக்குனாங்க. இப்ப அந்த எண்ணிக்கை 600 ஆகிருச்சு. ஆரம்பத்துல இவங்க, குமரி மாவட்டத்து ஏழைகளுக்கு கல்வி உதவி, திருமண உதவி, சிறுதொழிலுக்கு உதவின்னு செஞ்சுட்டு இருந்தாங்க. 2007-ல் தான் இந்த ஆஸ்பத்திரிய ஆரம்பிச்சாங்க. இவங்களோட நோக்கத்தைப் புரிஞ்சுக்கிட்டு இங்கிருக்கிற முஸ்லிம் சமுதாய டிரஸ்ட் 12 சென்ட் நிலத்தை ஆஸ்பத்திரிக்காக இலவசமா குடுத்தாங்க” என்றார்.

x