கே.கே.மகேஷ்
‘ஆவின்’ தலைவர் ஆக ஆசைப்பட்ட தம்பி அந்த நாற்காலியில் உட்கார்ந்த 5 மணி நேரத்திற்குள் கட்சியை விட்டே நீக்கி கையெழுத்திடும் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகியிருக்கிறார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்! இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் பல இருக்க... அண்ணன் ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கையை இந்த விவகாரம் அதலபாதாளத்தில் தள்ளியிருக்கிறது!
ஓ.பி.எஸ். சறுக்கிய கதை!
ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு அடுத்த நிலையில் நிதியமைச்சராக அதிகாரம் செலுத்தினார் ஓபிஎஸ். அவரிடம் கூடுதல் பொறுப்பாக கட்சியின் பொருளாளர் பதவியும் அளிக்கப்பட்டது. கட்சிப் பணியிலும் ஆட்சிப் பணியிலும் பிஸியாக இருந்ததால் கட்சிக்கான வசூல் விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பை தம்பி ஓ.ராஜவிடம் ஒப்படைத்தார் ஓபிஎஸ். தடபுடலாய் களத்தில் இறங்கிய தம்பி, அப்படியே கொஞ்சம் ஊடு பாய்ந்ததால் அம்மாவின் கோபத்துக்கு ஆளாகி, சென்னைக்கு அழைத்துவரப்பட்டு ‘கவனித்து’ அனுப்பப்பட்டார். இதன் தொடர்ச்சியாகக் கட்சியை வழிநடத்தும் நால்வர் அணியிலிருந்து நாசூக்காய் கழற்றிவிடப்பட்டார் ஓபிஎஸ்!