கான மழை பெய்யாது காட்டே அழிச்சதாரு..?- இசையால் முழங்கும் ஒரு வித்தியாசமான வகுப்பறை! 


கா.சு.வேலாயுதன்

டெல்லியில் இருக்கும் தேசிய நாடகக் கல்லூரியை அறிவீர்களா? ஓம்பூரி, நஸீருதீன்ஷா, அனுபம்கேர், ஷாரூக்கான் எனப் பலரும் பயிற்சி பெற்ற களம் அது. கோவை ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் வகுப்பு ஒன்றில் நுழைந்தபோது அந்தக் கல்லூரிதான் நினைவுக்கு வந்துபோனது. சந்தேகம் இருந்தால் இதோ அந்த வகுப்பறை மேடையில் மாணவர்கள் இசைக்கும் பாடலைக் கேளுங்கள்...

‘கான மழை பெய்யாது காட்டே அழிச்சதாரு...

பூமியெல்லாம் பற்றியெரிந்திடவே பொழப்பே கெடுத்ததாரு..
பொழப்பைக் கெடுத்தவனை - காட்டை
அழிச்சவனை காடு கொண்டு போகாதோ - மரத்தை
முறிச்சவனை மண்மூடிப் போவதோ!’

x