பிடித்தவை 10: கவிஞர் கயல்விழி


கரு.முத்து

வேலூரில் வசிக்கும் முனைவர் கயல்விழி அங்குள்ள முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் வணிகவியல் துறை உதவிப்பேராசிரியராகப் பணிபுரிகிறார். மூன்று துறைகளில் முதுகலைப் பட்டமும், வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மையியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ள இவர் எழுத்துலகிலும் அழுத்தமான முத்திரை பதித்து வருகிறார். குறிப்பாகக் கவிதையுலகில் தனக்கான தனித்த அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார்.
’கல்லூஞ்சல்’, ‘ மழைக்குருவி’ என்ற இரு கவிதை நூல்களை வெளியிட்டுள்ள கயல்விழி, சமீபத்தில் ‘ஆரண்யம்’ என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். சமூகசேவையில் நாட்டமுள்ள இவர், பட்டிமன்றப் பேச்சாளராக பல்வேறு மேடைகளிலும், தொலைக்காட்சிகளிலும் முழங்கிவருகிறார். தகவு மின் இதழ், இனிய உதயம் உள்ளிட்ட பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதிவரும் கயல்விழிக்குப் பிடித்தவை பத்து இங்கே...

கவிஞர்கள்: மொழியின் அடர்த்திக்காக மிகவும் பிடித்த கவிஞர் ஃபிரான்சிஸ் கிருபா. அவருடன் சேர்த்து தேவதேவன், யூமாவாசுகியையும் மிகவும் பிடிக்கும். பழங்கவிஞர்களில் சேக்கிழாரையும், ஓளவையாரையும், பாரதியாரையும் மிகவும் வியந்து ரசிக்கிறேன்.

புத்தகங்கள்: அதிமுக்கியமான விசயங்களை மிக எளிமையாக அனைவருக்கும் புரியும்படி சொல்வதால் Romance with 
God, Love freedom and Aloneness என்ற புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். அத்துடன், ‘ ஒரு புளிய மரத்தின் கதை’, ‘அசுர கணம்’, ‘மதிலுகள்’ ஆகியவையும் பிடித்த புத்தகங்கள்தான்.

x