பட்டப்பகலிலே... வெட்டவெளியிலே!


கே.கே.மகேஷ்

“சுதந்திரம் வாங்கி இத்தனை வருஷமாச்சு. நாட்டை ஆள்றவங்க தென்மாவட்டத்துக்குன்னு சொல்லிக்கிறாப்புல ஒரு சின்ன தொழிற்சாலையையாவது கொண்டு வந்திருக்காங்களா?” என்று கேட்பவரா நீங்கள்... மதுரை - நெல்லை ரிங் ரோட்டுக்கு ஒரே ஒரு முறை விஜயம் செய்யுங்கள்.

அங்கே, பட்டப்பகலில்... வெட்ட வெளியில் ஒரு சைக்கிள் தொழிற்சாலை மும்முரமாக இயங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இதற்கு போலீஸ் பாதுகாப்பு வேறு. 500 மீட்டர் தள்ளி நின்று பார்த்தாலும், தலையைச் சுழற்றாமல் அத்தனை உருப்படிகளையும் பார்த்துவிட முடியாத அளவுக்கு பல்லாயிரக்கணக்கில் புத்தம் புதிய சைக்கிள்கள் வரிசை கட்டி நிற்கும். 

இந்தத் தொழிற்சாலை எப்போது ஆரம்பித்தார்கள் என்று உள்ளே போய் பார்த்தோம். சர்க்கஸ் கூடாரம் போல ஒரு டென்ட் அடித்து உள்ளே ஒரு டஜன் வடநாட்டு இளைஞர்கள் எந்திரம் போல வேலைபார்த்துக்கொண்டிருந்தார்கள்.

x