நீருக்குள் மூழ்கிடும் ‘தாமரை’


தொகுப்பு: தேவா

இப்போதெல்லாம் ஊடகங்களைவிட நெட்டிசன்கள் அப்டேட்டாக இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்குப் பலத்த அடி. இதை கான்செப்டாக வைத்து ஏகப்பட்ட மீம்களும் கமென்டுகளும் பறந்தன. ‘நீருக்குள் மூழ்கிடும் தாமரை, சட்டென்று மாறுது வானிலை’ என்றும், ‘நார்த் இண்டியாவுலயே இவ்வளவு அடின்னா... சவுத்துல’ என்றும் நெட்டிசன்கள் பாஜகவைக் கலாய்த்து தள்ளினர். இன்னொரு பக்கம் ‘மோடி அலை ஓய்ந்தது, ராகுல் அலை ஆரம்பம்’ என்றும் ‘பப்பு இப்போ பாஸ் ஆகிவிட்டார்’ என்றும் அவரது வெற்றியைப் புகழ்ந்தனர். இதனால் கடந்த வாரத்தில் இணையத்தில் அதிகம் ட்ரெண்டானது பாஜகவும், மோடியும், ராகுலும் தான். 

திமுகவில் நாளை இணைகிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. - செய்தி.
போக்குவரத்துத் துறையில் ஆட்டையப் போட்ட காசை எல்லாம் கோபாலபுரம் இப்ப ஆட்டையப்போடப் போகுது. 
- அருண் குமார்

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு. - செய்தி.
விலை குறைந்தபோது, மோடிக்கு பங்கிருக்கு என்று சொன்ன தமிழிசையக்கா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். - ரஹீம்

x