போலீஸ் அதிகாரிகள் என்னை போட்டுத்தள்ளப் பார்க்கிறார்கள்- வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் பகீர்


கரு.முத்து

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றிய தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்திருக்கும் உயர் நீதிமன்றம், நவம்பரில் ஓய்வுபெற இருந்த ஐ.ஜி பொன்.மாணிக்கவேலே சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக மேலும் ஓராண்டுக்கு நீடிப்பார் என்றும் அண்மையில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசரமாய் அப்பீல் செய்திருக்கிறது தமிழக அரசு. தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் எத்தனையோ இருக்க, இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இந்த நிலையில், சிலைக் கடத்தல் வழக்குகளை உயர் நீதிமன்றம் பொன்.மாணிக்கவேலிடம் ஒப்படைக்கக் காரணமான வழக்கறிஞர் யானை ராஜேந்திரனை சந்தித்து இதுகுறித்துப் பேசினேன்.

“இப்படி ஒரு உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது நானே எதிர்பாராத ஒன்றுதான். சிலைகடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது செல்லாது என்று உத்தரவிடக்கோரித்தான் வழக்கு தாக்கல் செய்திருந்தேன். ஆனால் அதோடு சேர்த்து பொன்.மாணிக்கவேலுவை மேலும் ஒரு வருடத்துக்கு சிறப்பு அதிகாரியாக நீதிமன்றம் நியமிக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.’’

பொன்.மாணிக்கவேலுக்கு பொறுப்பு நீட்டிப்பு வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

x