மரண மாஸ் ‘பேட்ட’


கதையே இல்லை, லாஜிக்கே இல்லை என்ற விமர்சனங்கள் எல்லாம் இருந்தாலும்கூட, வியாபார ரீதியியில் வெற்றிபெற்றுவிட்ட 2.0 படத்தின் கிரெடிட் முழுக்க ஷங்கரே எடுத்துக்கொண்டு போய்விட்டார்.  சூப்பர் ஸ்டார் ரஜினிக்குப் பெரிய அளவில் பெயர் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த படமான ‘பேட்ட’யாவது ரஜினிக்குப் பெயர் பெற்றுத்தருமா என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அவரது 
ரசிகர்கள். இந்த நிலையில்தான்  ‘பேட்ட’ படத்தின் சிங்கிள் ட்ராக் டிசம்பர் 3-ம் தேதி வெளியானது. அனிருத் இசையில், அனிருத்தும் எஸ்பிபியும் பாட ‘மரண மாஸ்’பாடல் இணையத்தைத் தெறிக்கவிட்டிருக்கிறது. யூ டியூப் தளத்தில் இரண்டே நாளில் 75 லட்சம் பார்வைகளைக் கடந்திருக் கிறது.  ‘பேட்ட’யின் முழு வடிவத்தை தரிசிக்க ஆவலுடன் துடித்துக்கொண்டிருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள்.  

உ.பியில் 3 மாதங்கள் திருமணம் நடத்த அரசுத் தடை.
- செய்தி.
முரட்டு சிங்கிள முதலமைச்சர் ஆக்கினா இப்படித்தான் நடக்கும்.
- கிப்சன்.

3000 கோடி பட்டேல் சிலையில் விரிசல்.
- செய்தி.
சீனாவுல ‘அம்மிக் கல்' கொத்துறவனை ‘சிற்பி’னு நெனச்சு கூட்டிகிட்டு வந்துருப்பாங்க போல.
- மாங்குடி கணேஷ்.

மின்வாரியத் தொழிலாளர்களுக்கு தோசை சுட்டுக்
கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்.
- செய்தி.
என்னதான் தோசை சுட்டாலும் நீங்கள் காசு சுட்டதை யாரும் மறக்க மாட்டார்கள் அமைச்சரே.
- அருண்குமார்.

x