குழந்தைகளுக்கு இதையும் கற்றுக் கொடுங்கள்குழந்தைகளுக்கு இதையும் கற்றுக் கொடுங்கள்


பி.எம்.சுதிர்

நம் குழந்தைகளைக் கல்வியில் மட்டு மின்றி நடத்தையிலும் சிறந்தவர் களாக வளர்க்க வேண்டியது நமது கடமை. அந்த வகையில் நமது குழந்தைகள் நம்மிலும் சிறந்த குணவான்களாக இருக்க நாம் அவர்களுக்குச் சிறு வயதில் கற்றுக்கொடுக்க வேண்டிய நன்னடத்தை முறைகள் சிலவற்றைப் பார்ப்போம்...

நேரத்தை மதித்தல்

`காலம் பொன் போன்றது’ என்பார்கள். அந்தக் காலத்தை மதிக்க சிறு வயது முதலே குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். காலையில் குறித்த நேரத்தில் எழுவதிலிருந்தே அவர்களுக்கான நேர மேலாண்மையை நாம் உணர்த்த வேண்டும். பள்ளிக்கோ அல்லது வேறு ஏதாவது நிகழ்ச்சிகளுக்கோ செல்வதாக இருந்தால், குறித்த நேரத்தில் செல்வது அவசியம் என்பதைக் குழந்தைகள் மனதில் நாம்தான் பதியவைக்க வேண்டும். அதற்கு நாம் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து காட்ட வேண்டும். அதுபோல், நேரத்தை வீணடிக்காமல் புதிய விஷயங்களைக் கற்பது எப்படி என்பதையும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் காலத்தை உணர்ந்து செயலாற்றுவார்கள். காலத்தின் அருமை உணர்ந்து செயல்படுவதால் வெற்றிகள் தேடி வரும்.

x