இங்கேயும் ஒரு பட்ஷிராஜன்!


என்.சுவாமிநாதன்

தமிழ் சினிமாவை உலகத்தரத்துக்குப் பேசவைத்திருக்கும் படம் 2.0! இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரம் பட்ஷிராஜன். ரஜினியைவிட மேலாகப் பேசப்படும் இந்தக் கதாபாத்திரத்தை பறவை ஆராய்ச்சியாளர் சலீம் அலியை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதாக படக்குழுவே தெரிவித்திருக்கிறது. அப்படியொரு பட்ஷிராஜன் நெல்லைச் சீமையில் நிஜமாலுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்!

சலீம் அலி புண்ணியத்தால் பறவைகள் குறித்த புரிதல் பரவலானதால் இன்று ஆங்காங்கே ’பட்ஷிராஜன்கள்’ பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தின் பட்ஷிராஜனாக இருக்கிறார் கூந்தன்குளம் பால்பாண்டி. 65 வயதாகும் பால்பாண்டி கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தின் பாதுகாவலர். பறவைகள் பராமரிப்பிலேயே தன் மனைவியை இழந்தவர். ஒரு மாலைப் பொழுதில், தனக்கு இஷ்டமான பறவைகளின் வருகைக்காக சரணாலயத்தில் காத்திருந்தவரை சந்திக்கச் சென்றேன்.

“திருநெல்வேலி பக்கத்துல கூந்தன்குளம் ஊர் இருக்கு கூடிவாழும் பறவைகளைக் கண்டுடுவீர் இங்கு ஒற்றுமையாய் ஒன்றுகூடி வாழ்ந்திடுமே...
கூந்தன்குளத்துக்கு வருவீர்…கோடி நன்மை பெறுவீர்’’

x