அலறவைக்கும் ஆஸ்துமா!


டாக்டர் கு. கணேசன்
gganesan95@gmail.com

“ஒரு நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. ஆனால், கட்டுப்படுத்த முடியும்” என்னும் விதிக்குள் அடங்கும் நோய் வரிசையில் முதலிடம் பிடிப்பது ஆஸ்துமா. சுவாசக் காற்று கடுமையாக மாசுபட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் ஆஸ்துமாவால் அவதிப்படுகிறவர்கள் உலகில் அதிகரித்து வருகின்றனர். சமீபத்திய புள்ளிவிவரப்படி உலகம் முழுவதிலும் சுமார் 34 கோடிப் பேருக்கு ஆஸ்துமா இருக்கிறது. இதில் இந்தியாவின் பங்கு 2 கோடிப் பேர்.

ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன். ஆஸ்துமா என்பது நோயல்ல. ‘மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் ஏற்படுகிற தற்காலிகச் சீர்குலைவு’தான் ஆஸ்துமா. இது தொற்றுநோயுமில்லை; ஆபத்தானதுமில்லை; ஆனால், வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிறது. இந்தியாவில் ஐந்திலிருந்து 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் நூற்றுக்கு 15 பேருக்கு ஆஸ்துமா இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் சென்னையில் மட்டும் ஆஸ்துமா பாதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. அப்படியென்றால் ஆஸ்துமாவின் ஆக்ரோஷத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

x