வேல ராமமூர்த்தி
irulappasamy21@gmail.com
“ஏதோ பேசிக்கிட்டான்ங்க..!”
கிணற்றுப் பட்டியல் கல்லில் சாராய பாட்டிலை வீசி நொறுக்கிய சப்தம், வானத்து இடிச் சத்தத்தில் கரைந்தது.
உச்சிக்கு ஏறிய ரெண்டு பாட்டில் சாராய போதையோடு, “அழகியை விட்டுட்டேனே! ஏமாந்துட்டேனே!” உதடுகள் முணுமுணுக்க, கண்களை மூடியவாறு கொட்டும் மழையில் நனைந்தான் சோலை.
கடைக்குள் இருந்த லோட்டா, “ஏப்பா வெள்ளாங்குளத்து தம்பி… ஏன் மழையிலே நனையிறே? உள்ளே வாப்பா” என்று அழைத்தான்.
காதில் வாங்காத சோலை அசையாமல் நின்றான்.