ருஜுதா திவேகர்
readers@kamadenu.in
பெண் பூப்பெய்தும் சராசரி வயது எப்படி குறைந்துவிட்டதோ அதேபோல்தான் இப்போதெல்லாம் 40 வயது ஆரம்பத்திலேயே பெண்களுக்கு மெனோபாஸ் வந்துவிடுகிறது. அப்படியென்றால் 40-ஐ நெருங்கிவிட்டாலே பெண் அதிகமாக ஆரோக்கிய திட்டமிடல் செய்துகொள்வது அவசியமாகிறது.
பிரத்யேகமாக பெண்களுக்கென்று...
பெண்ணின் உடலியல் செயல்பாடுகள் மிகவும் பிரத்யேகமானது. ஆணைப் போல் அல்லாமல் குழந்தைப் பருவம், பூப்பெய்தும் விடலைப் பருவம், பேறுகாலப் பருவம் பின்னர் மாதவிடாய் நிற்றல் பருவம் எனப் பல்வேறு படிநிலைகளைப் பெண் கடக்க வேண்டியிருக்கிறது. இதில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஹார்மோன்களின் பங்களிப்பு இருக்கிறது.
மாதவிலக்கு சுழற்சியைக் கட்டுப்படுத்தும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்டிரான் ஹார்மோன்கள் சுரப்பு குறைய ஆரம்பித்து ஒரு கட்டத்தில் மாதவிடாய் சுழற்சி முற்றிலுமாக நின்றுபோகிறது. இதுவே மெனோபாஸ் பருவம். மெனோபாஸ் எட்டிய பெண்ணால் கருத்தரிக்க முடியாது.