பதற்றத்தில் நிற்கும் பந்தம்!
காடுவெட்டி குரு சிகிச்சையில் இருந்த 42 நாட்களும் பக்கத்திலிருந்து அவரைக் கவனித்துக் கொண்டவர் அவரது சகோதரியின் மகன் மனோஜ்கிரண். இவருக்கும் குருவின் மகள் விருத்தாம்பிகைக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்பது சிறுவயதிலேயே பேசிவைக்கப்பட்ட திருமண பந்தம். ஆனால், இதில் குருவின் மனைவிக்கு உடன்பாடில்லை. இதனிடையே, பாமக முன்னாள் எம்பி-யான தன்ராஜின் குடும்பத்தில் விருத்தாம்பிகையை மணம் முடிக்க பிரயாசைப்பட்டாராம் மருத்துவர் ராமதாஸ். இந்த நிலையில், ஒருவரையொருவர் காதலித்து வந்த மனோஜும் விருத்தாம்பிகையும் கடந்த 28-ம் தேதி, மாலைமாற்றிக் கொண்டார்கள். இந்தத் திருமணத்தில் குருவின் மகன் கனலரசும் கலந்து கொண்டார். மனோஜின் பெற்றோரும் குருவின் மனைவி சொர்ணலதாவும் கலந்துகொள்ளவில்லை. மனோஜும் விருத்தாம்பிகையும் காடுவெட்டி ஊருக்குள் வரக்கூடாது என சிலர் எதிர்ப்பதால், பாமகவினரால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லி, இருவரும் பாதுகாப்புக் கேட்டு கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அபயம் கேட்டிருக்கிறார்கள்.
டாஸ்மாக்கில் அதிரடி வசூல்!