சூப்பர் ஸ்டார் வாங்கிய பல்பு


ரஜினி எக்குத்தப்பாய் ஏதாவது பேசிவிட, நெட்டிசன்கள் அவரை வெச்சு செய்துவிடுகிறார்கள். அப்படி சமீபத்தில் ட்ரெண்டாக்கியதுதான் 'யார் அந்த ஏழு பேர்?' முதலில் நிருபர், ஏழு பேர் விடுதலை பற்றி கேள்வி எழுப்பியதும் ஞாபகத்துக்கு வரவில்லை என்றாலும் அடுத்தடுத்த கேள்விகளுக்காவது சுதாரித்துப் பதில் சொல்லியிருக்கலாம். அப்படியும் இல்லாமல் ரஜினி சொன்ன பதில்கள் எல்லாம்  வழக்கம்போல அவரை, தேரை இழுத்துத் தெருவில் நிறுத்திவிட்டது. இரண்டு பெருந்தலைகள் மறைவுக்குப் பிறகாவது,  “தமிழகத்தில் அரசியல் வெற்றிடம், சிஸ்டம் சரியில்லை” என்று எதையாவது சொல்லி அரசியலில் குதித்துவிடலாம் என்று நினைத்தார். ஆனால் இப்போது, பாஜக-வின் நெருக்கடி இருப்பதாலோ என்னவோ பம்மிப் பதுங்குகிறார். அதனால்தான், “இன்னும் நான் அரசியலில் இறங்கவில்லை” என்கிறார். இன்னும் என்னவெல்லாம் உளறப்போகிறாரோ தெரியவில்லை.

“மோடிக்கு மீண்டும் ஒரு வாய்ப்புத் தர வேண்டும்” 
- நாராயணமூர்த்தி.
எதுக்கு ரெண்டாவது கிட்னியையும் எடுத்துட்டுப் போகவா..? உடைச்சதெல்லாம் போதும்!
- ஷிவானி சிவக்குமார்.

திருமணமான பெண்களில் மூன்றில் ஒருவர் கணவனிடம் அடி வாங்குகிறார்கள். ஆய்வில் அதிர்ச்சித் தகவல். 
- செய்தி.
 உங்க ஆய்வுல தீய வைக்க... வீட்டுக்கு வந்து பாருங்க, யப்பா என்னா அடி - ஆண்கள்! 
- செந்திலின் கிறுக்கல்கள்.

`பவர் ஸ்டார்' பாஜகவில் சேர்ந்தார். 
- செய்தி.
`கபாலி' பாஜகவுக்கு வருவார்னு சொன்னானுங்க; ‘பொன்னம்பலம்' வந்தார். ‘சூப்பர் ஸ்டார்' வருவார்னு சொன்னாங்க; ‘பவர் ஸ்டாரே' வரார்.
- மாங்குடி கணேஷ்.

x