கண்ணாமூச்சி ஆடும் காடுவெட்டி குரு குடும்பம்... வேதனையில் வெதும்பும் வன்னியர் குலம்!


கரு.முத்து

காடுவெட்டி குரு என்னும் குருநாதன். வன்னியர் சங்கத் தலைவராக இருந்த இவர் பேசினால் வன்னிய இளைஞர்கள் இரத்தம் சூடேறும், நரம்புகள் முறுக்கேறும். அத்தனை பேரின் ஆவேசத்தையும் தன் கனல் பேச்சால் கட்டுப்படுத்தியவர். அப்படிப்பட்டவரின் மறைவுக்குப் பின்னர் அவரது குடும்பம் தற்போது தலைபிய்ந்த கூடையாய் தத்தளிக்கிறது.

ஒருங்கிணைக்க யாருமில்லாமல் குருவின் மனைவி, மகன், தாய் மற்றும் சகோதரிகள் என அனைவரும் தனித்தனி பாதையைத் தேர்ந்தெடுத்துப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவரவர் பாதையில் பயணித்தாலும் பரவாயில்லை, ஒவ்வொருவரும் மற்றவர் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதால் குருவின் நட்பு வட்டாரமும், வன்னியர்சங்கம் மற்றும் பாமக வட்டாரமும் பெரும் பரிதவிப்பில் இருக்கிறது.

தனது மகனையும், மகளையும் சிலர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், மாமியார் மற்றும் நாத்தனார்கள் உள்ளிட்ட கணவர் குடும்பத்தினர்மீது தனக்கு நம்பிக்கை இல்லை எனவும் சில தினங்களுக்கு முன்பு குருவின் மனைவி சொர்ணலதா சமூக வலைதளங்கள் வழியாக ஒரு கடிதத்தை வெளியிட்டார். அதுபோலவே, குருவின் மகன் கனலரசு, ‘எனது தாயை அவரது உறவினர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் மிரட்டி வைத்துக்கொண்டு என்னைக் கூட பார்க்கவிடாமல் வைத்திருக்கிறார்கள்.  ஐயா (மருத்துவர் ராமதாஸ்) தலையிட்டு என் தாயை மீட்டு காடுவெட்டிக்கு அனுப்பிவைக்க வேண்டும்’ என்றும் வாட்ஸ் -அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

x