சைஸ் ஜீரோ 16: கடைச் சரக்காவதற்காக டயட் இருக்காதீர்...


ருஜுதா திவேகர்

ஒரு வாலிப பெண் கோபப்பட்டால் போதும், உடனே குடும்பத்தில் யாராவது ஒருவரேனும், ``நாளைக்கு இப்படி உன் மாமியார் வீட்டில் பேசிப் பார் தெரியும்!'' என்று விமர்சனத்துடன் வந்துவிடுவார்கள். விடுமுறை நாளே என்று கூடுதலாக காலை ஒரு மணி நேரம் தூங்கினாலும் போதும், அதற்கும் ஒரு வசனம் இருக்கிறது... ``நீயெல்லாம் கல்யாணம்கட்டிப் போய் என்ன செய்யப்போகிறாயோ?'' என்று. சற்றே பருமனாக இருந்தால், ``எப்படித்தான் மாப்பிள்ளை பார்க்கப் போகிறேனோ?'' ஒல்லியாக இருந்தால், ``இப்படி வற்றல் போல் இருந்தால் யார் திருமணம் செய்து கொள்வார்கள்?'' இப்படி எல்லாவற்றிற்கும் ஒரு ரெடிமேட் வசனம் தயாராக இருக்கும்.

18 வயதை ஒரு பெண் கடந்துவிட்டாலே போதும், அவளை சந்தை சரக்காக பார்க்கும் போக்கு ஏழை, நடுத்தர, பணக்காரர்கள் என வர்க்க பேதம் இல்லாமல் எல்லா குடும்பங்களிலும் சமநிலை நிலவுகிறது.

கிராஷ் டயட்டால் இறங்கிய கர்ப்பப்பை

x