பிடித்தவை 10- கவிஞர் சுகிர்தராணி


எம்.சோபியா

நவீனப்  பெண் கவிஞர்களில் தவிர்க்க முடியாத ஆளுமை சுகிர்தராணி. சாதிக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட பெண்களுக்காகவும் தொடர்ந்து எழுதி வரும் பெண்ணியச் செயற்பாட்டாளர். வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அருகிலுள்ள இலாலாப்பேட்டை என்னும் கிராமத்தில் வசித்து வரும் இவர், காவேரிப்பாக்கம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார்.

‘கைப்பற்றி என் கனவு கேள்’, ‘இரவு மிருகம்’, ‘அவளை மொழிபெயர்த்தல்’, ‘தீண்டப்படாத முத்தம்’, ‘காமத்திப்பூ’ ‘இப்படிக்கு ஏவாள்’ ஆகிய ஆறு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள இவர், தற்போது தலித் வாழ்வியல் சார்ந்த நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கவிதை நூல்களுக்காக தேவமகள் கவித்தூவி விருது, பாவலர் எழுஞாயிறு விருது, புதுமைப்பித்தன் நினைவு விருது, நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். ‘அப்பாவின் ஞாபக மறதி’ எனும் கவிதை ‘கண்ணாடி மீன்' என்ற குறும்படமாக எடுக்கப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றது. இவரது கவிதைகள் சில மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. சில கவிதைகள் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவருக்குப் பிடித்தவை 10 இங்கே:

ஆளுமை: இலக்கியத்துக்கு தஸ்லிமா நஸ்ரின், அரசியலில் தோழர் நல்லகண்ணு, தொல்.திருமாவளவன், தலைவர்களில் அண்ணல் அம்பேத்கர், நாடகவியலில் பிரளயன், சமூகச் செயல்பாட்டில் வ.கீதா, திரைத்துறையில் தோழர் ரோகிணி, விளையாட்டுத்துறையில் சாந்தி.

x