ஹாட் லீக்ஸ்: அதனால மறந்துட்டாங்களோ..?


அதனால மறந்துட்டாங்களோ..?

பெரும்பாலான மக்களவை எம்பி-க்கள் நாடாளுமன்ற அலுவலகத்தின் அலுவலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தீபாவளி பண்டிகைக்கு ஸ்வீட் உள்ளிட்ட அன்பளிப்புகளை அனுப்பிவைப்பது வழக்கம். ஆனால், இந்த முறை அப்படி யாரும் அன்பளிப்புகளை அனுப்பவில்லையாம். அடுத்த தீபாவளி வரும்போது இவர்களின் எத்தனை பேர் மீண்டும் எம்பிக்களாக தேர்வாகி இருப்பார்கள் என்பது நிச்சயமாகத் தெரியாது. வாய்ப்புக் கிடைத்தாலும் ஜெயிக்கமுடியுமா என்பது சிலரது கவலை. திரும்பவும் நமக்கு சீட் கிடைக்குமா என்பது பலரது கவலை. இந்தக் கவலையால் நாடாளுமன்ற அலுவலர்களையும் அதிகாரிகளையும் இந்தத் தீபாவளிக்கு மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது!

மக்களவைக்கு சரத்பவார் போட்டி இல்லை

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, “இதுதான் நான் போட்டியிடும் கடைசித் தேர்தல், இனிமேல் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்” என்று சொன்னார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார். இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சரத் பவார் மீண்டும் போட்டியிட வேண்டும்” என்ற வேண்டுகோளை முன்வைக்கிறார்களாம். இதை ஏற்க மறுக்கும் பவார், கூட்டணிக் கட்சிகள் பிரதமர் வேட்பாளராகத் தன்னை முன்னிறுத்தினால் அதையும் ஏற்பதில்லை என்ற மனநிலையில் இருக்கிறாராம்.

x